search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாக்குப்பதிவு இயந்திரம்"

    வாட்ஸ்அப் செயலியில் வேகமாக வலம் வரும் அதிர்ச்சி வீடியோவின் உண்மை பின்னணியை தொடர்ந்து பார்ப்போம்.



    இந்தியாவில் 2019 பொது தேர்தல் நடைபெற்று வெற்றியாளர்கள் அறிவிப்பு வெளியாகி வருகிறது. ஒட்டுமொத்த தேசமே புதிய மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் நிலையில், பழைய வீடியோ ஒன்று வைரலாகி மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறது.

    வைரலாகும் ஒரு நிமிட வீடியோவில் அறையினுள் அதிகாரிகள் சோதனை செய்வதும், அந்த அறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. 



    பின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் அறையில் இருந்தவர்களின் விவரங்களை ஒருவர் இந்தி மொழியில் சேகரிக்கும் காட்சிகளுடன் அந்த வீடியோ நிறைவடைகிறது. பொது தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில், குறிப்பிட்ட அரசியல் கட்சி வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றி இருக்கிறது என்ற வாக்கில் தகவல்கள் பரப்பப்படுகிறது.

    உண்மையில் தற்சமயம் பரவி வரும் வீடியோ கடந்த ஆண்டு நவம்பர் மாதம் எடுக்கப்பட்டது ஆகும். மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் சமயத்தில் இந்த சம்பவம் அரங்கேறியது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய தேர்தல் அதிகாரி ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். 
    இந்திய பொது தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்களை பா.ஜ.க. மாற்ற முயன்றதாக சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவின் மறுப்பக்கத்தை தொடர்ந்து பார்ப்போம்.



    இந்திய பொது தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை துவங்கி, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

    இந்நிலையில், 2019 இந்திய பொது தேர்தல் பற்றி சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. அவ்வாறு சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வைரலானது. அந்த வீடியோவில் பாதுகாக்கப்பட்ட அறையில் வைக்கப்பட்டு இருக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்களை பா.ஜ.க. மாற்ற முயற்சி செய்ததாக செய்தி தொகுப்பாளர் தெரிவிக்கும் காட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன.

    டி.என்.என். வொர்ல்டு எனும் பெயர் கொண்ட செய்தி நிறுவனம் சார்பில் இந்த வீடியோ வெளியாகி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி டெல்லி தேர்தல் அதிகாரியிடம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் பாதுகாப்பு பற்றி குற்றச்சாட்டு தெரிவித்தது.  



    இதேபோன்று 2019 பொது தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியானதில் இருந்து நிலவும் சூழல் பற்றி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

    இந்நிலையில், சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவில் மே 19 ஆம் தேதிக்கு பின் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் சற்று ஓய்வெடுக்கலாம் என்றும் இந்த சமயத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற பா.ஜ.க. ஆதரவாளர்கள் திட்டமிட்டிருப்பதாகவும் செய்தி தொகுப்பாளர் தெரிவிக்கிறார். மேற்கு வங்கம், ஒடிசா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், கர்நாடகா மற்றும் கேரளா போன்ற பகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற இருப்பதாக அவர் தெரிவிக்கிறார். 

    7.53 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில் செய்தி தொகுப்பாளரின் பெயர் குறிப்பிடப்படவே இல்லை. மேலும் அவர் வழங்கிய விவரங்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் ஆதாரங்களையும் அவர் தெரிவிக்கவில்லை. இவற்றை வைத்து பார்க்கும் போது வைரலான வீடியோ முற்றிலும் பொய் தகவல்களை கொண்டிருப்பதாகவே தெரிகிறது.



    டி.என்.என். வொர்ல்டு வலைதளம்

    வைரலான வீடியோவை வெளியிட்ட வலைதளம் டிரைகலர் நியூஸ் நெட்வொர்க் என்ற பெயரில் இயங்கி வருகிறது. இந்நிறுவனம் உலகம் முழுக்க செய்திகளை வெளியிட்டு வருகிறது. எனினும், இந்த வலைதளத்தில் இந்திய பொது தேர்தல் பற்றிய செய்திகளே அதிகம் இடம்பெற்று இருக்கின்றன. 

    இதே வலைதளத்தில் 2014 ஆம் ஆண்டு பொது தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டதாக செய்தி வெளியானது. இந்த செய்தி வீடியோவில் அமெரிக்க வல்லுநர் ஒருவர் பேசுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இதுதவிர இந்தியாவில் பண மதிப்பிழப்பு அறிவிப்புக்கு பின் பா.ஜ.க. கட்சி பழைய ரூபாய் நோட்டுகளை கமிஷன் அடிப்படையில் மாற்றிக் கொடுத்ததாகவும் இதே தளத்தில் செய்தி வெளியிடப்பட்டது. 

    இந்த வலைதளத்திற்கென ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களும் இயங்கி வருகின்றன. இவற்றிலும் பா.ஜ.க. கட்சிக்கு எதிரான தகவல்கள் அதிகளவில் பதிவிடப்பட்டுள்ளன. டி.என்.என். வலைதளத்தின் உரிமையாளர் டயானா இரினா பிசின் ஆவார். இவர் ரோமானியாவை சேர்ந்தவர் ஆவார். நிறுவனத்தின் ஒற்றை பங்குதாரர் மற்றும் தலைவராக இவர் இருக்கிறார். அலுவலக முகவரி லண்டனில் இயங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த முகவரி போலியானதாகும். இந்த முகவரியை பயன்படுத்த ஆண்டு கட்டணம் செலுத்தினாலே போதுமானது.
    இந்தியாவில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியும் என சமீபத்தில் லண்டனில் நிரூபிக்கப்பட்டதாக வெளியாகும் தகவலுக்கு மத்திய மந்திரி பதிலளித்துள்ளார். #MANaqvi #EVMtampering
    புதுடெல்லி:

    கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் உவாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்ததன் மூலம் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்து, பா.ஜ.க. மத்தியில் ஆட்சி அமைத்து விட்டதாக பிரபல மின்னணு தொழில்நுட்ப நிபுணரான சையத் சுஜா என்பவர் குற்றம்சாட்டியுள்ளார்.

    பின்னர், உத்தரபிரதேசம், குஜராத், டெல்லி, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஆகிய மாநில சட்டசபை தேர்தல்களிலும் இந்த தில்லுமுல்லு தொடர்ந்ததாகவும் தெரிவித்தார்.

    ராணுவ தேவைக்காக பயன்படுத்தப்படும் அலைவரிசையை பா.ஜ.க. பயன்படுத்தி, வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குள் ஊடுருவி இந்த தில்லுமுல்லுவை நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    2009-2014 ஆண்டுகளுக்கிடையில் ‘இ.சி.ஐ.எல்.’ எனப்படும் இந்திய மின்னணு கழகத்தில் (எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா) பணியாற்றியவர் சையத் சுஜா. 

    வாக்குப்பதிவு இயந்திரங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டவர்களில் முக்கியமானவர்களில் ஒருவரான நான்  இந்த மோசடியை அம்பலப்படுத்தியதால் என்மீது தாக்குதல் நடத்தி பா.ஜ.கவினர் கொல்ல முயன்றனர் என்னும் ஒரு ‘பகீர்’ தகவலை சையத் சுஜா வெளியிட்டுள்ளார்.

    இந்த தில்லுமுல்லு தொடர்பாக விரிவாக ஆராய்ந்து கட்டுரை எழுத முயன்றதால்தான் கர்நாடக மாநிலத்தில் பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இந்த விவகாரத்தை தெரிந்து வைத்திருந்த மத்திய மந்திரி கோபிநாத் முன்டேவும் கொல்லப்பட்டதாக அவர் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

    ஒரு கட்சி வேட்பாளருக்கு விழும் வாக்குகளை வேறொருவருக்கு விழுந்ததுபோல் பதிவாகச் செய்வது எப்படி? என்று இந்தியாவில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தி சமீபத்தில் லண்டனில் இருந்து வீடியோ கான்பிரசிங் மூலம் செயல்முறை விளக்கத்தையும் சையத் சுஜா செய்து காட்டினார். 

    இந்த செயல்முறை விளக்கத்தின்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் கபில் சிபல் அருகில் இருந்ததால் இந்த விவகாரம் தற்போது இந்திய அரசியல் அரங்கில் சூடுபிடித்துள்ளது. தற்போது அமெரிக்காவில் பணியாற்றும் சையத் சுஜா அந்நாட்டு அரசிடம் தஞ்சம் கேட்டு விண்ணப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், இதுதொடர்பாக இந்திய தேர்தல் கமிஷன் இன்று அளித்துள்ள விளக்கத்தில், ‘இந்த இயந்திரங்கள் அனைத்தும் மிகுந்த பாதுகாப்புடன் அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களால் தயாரிக்கப்படுகின்றன.

    புளூடூத் அல்லது வைஃபை மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குள் யாரும் ஊடுருவி தில்லுமுல்லு செய்ய முடியாது. வாக்குப்பதிவு இயந்திரங்களை திறந்துதான் எதையும் செய்ய முடியும். அப்படி திறக்கப்பட்டால் எங்கள் அதிகாரிகள் அதை கண்டுபிடித்து விடுவார்கள’ என தெரிவித்துள்ளது.

    லண்டனில் நடைபெற்றதாக கூறப்படும் சம்பவத்தில் எதிர்தரப்பாக மாறி விளக்கம் அளிக்க தேர்தல் கமிஷன் விரும்பவில்லை. எனினும், இவ்விவகாரம் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுப்பது? என்பது தொடர்பாக ஆலோசிக்கப்படும்’ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்த விவகாரம் தொடர்பான செய்திகள் வெளியானதும் டெல்லியில் இன்றிரவு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி, ‘காங்கிரஸ் கட்சியிடம் பத்திரிகை துறைசார்ந்த பலர் சிக்கியுள்ளனர். ஆட்சியில் இருந்து மோடியை அகற்ற வேண்டும் என்பதற்காக இந்த தன்னார்வலப் பத்திரிகையாளர்கள் பாகிஸ்தானின் உதவியைக்கூட நாடுவார்கள். 

    வரும் பாராளுமன்ற தேர்தலில் தங்களுக்கு தோல்வி நிச்சயம் என்பது உறுதியாகிவிட்ட நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு என்ற பிரச்சனையை காங்கிரஸ் கட்சியினர் பூதாகரப்படுத்தி தேர்தல் ஆதாயம்பெற நினைக்கிறார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    சமீபத்தில் கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி தலைமையில் நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர்கள் மாநாட்டில், எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக பழையபடி வாக்குச்சீட்டு முறை பின்பற்றப்பட வேண்டும் என சில தலைவர்கள் வலியுறுத்தி இருந்தனர்.

    பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் தேர்தல் முறைகளில் செய்யப்பட வேண்டிய சீர்திருத்தம் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரைப்பதற்காக எதிர்க்கட்சிகள் சார்பில் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டதாக மம்தா பானர்ஜி  தெரிவித்தார்.

    இந்த குழுவில் காங்கிரஸ் கட்சி சார்பில் அபிஷேக் மனு சிங்வி, சமாஜ்வாடி கட்சி சார்பில் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் சார்பில் சதீஷ் மிஷ்ரா, ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #MANaqvi  #EVMtampering
    ஈராக் தலைநகர் பாக்தாதில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரம் வைத்துள்ள பகுதியில் ஏற்பட்ட தீவிபத்து திட்டமிட்ட சதி என ஈராக் பிரதமர் ஹைதர் அலி அல்பாதி தெரிவித்துள்ளார். #Iraq #PMHaiderAlAbadi #BallotBox, #Storagesite #Burn
    பாக்தாத்:

    ஈராக் நாட்டு தலைநகர் பாக்தாதில் சமீபத்தில் நடந்த தேர்தலில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் நேற்று திடீரென தீபிடித்து விபத்து ஏற்பட்டது.

    தீ விபத்தை அறிந்த அதிகாரிகள் உடனடியாக செயல்பட்டு அங்கிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை பத்திரமாக மீட்டனர்.

    இந்நிலையில், ஈராக் தலைநகர் பாக்தாதில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரம் வைத்துள்ள பகுதியில் ஏற்பட்ட தீவிபத்து திட்டமிட்ட சதி என ஈராக் பிரதமர் ஹைதர் அலி அல்பாதி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து திட்டமிட்ட சதி. இதில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    மறு எண்ணிக்கை நடத்த வேண்டும் என அரசு முடிவு செய்திருந்த நிலையில் தீ விபத்து நடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. #Iraq #PMHaiderAlAbadi #BallotBox, #Storagesite #Burn
    ×